பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2024 - மீனம்

பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2024 - மீனம்

காலத்தையும், நேரத்தையும் வீணடிக்காமல் செயல்படும் மீன ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் தனஸ்தானத்தில் அமர்ந்து மறைவு ஸ்தானங்களை பார்ப்பதால்.. உங்களின் பல நாட்பட்ட பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு அமையும். கடவுள் நம்பிக்கையுடன் எந்த செயலையும் செய்து வருவீர்கள். ராசியில் ராகு வந்து அமர்வதால் சில நேரம் மறதி உண்டாகும். தொழில் ஸ்தானத்தில் குரு பார்வை பெறுவது.. பல தொழிலில் முதலீடு செய்து பயன்பெறும் வாய்ப்பைப் பெறுவீர்கள். அறிவியல் சார்ந்த துறையிலும். இசை கலையிலும் சிறந்து விளங்கி மேன்மை அடைவீர்கள். கோவில் திருவிழாகளில் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். பாதியில் நின்ற காரியம் செயல்பட துவங்கும். அரசியலில் சுய விரும்பமின்றி செயல்படுவீர்கள்.

சந்திராஷ்டம நாட்கள்:
 
01-02-2024 வியாழன் பகல் 12.18 முதல் 03-02-2024 சனி இரவு 09.29 மணி வரையும்.

28-02-2024 புதன் இரவு 07.35 முதல் 02-03-2024 அதிகாலை 05.02 மணி வரையும்.
 
நட்சத்திர பலன்கள்:-

பூரட்டாதி 4ம் பாதம்:
 
எல்லா சோதனைகளையும் தாங்கி திடமான மனநிலையில் சரி செய்து விடுவீர்கள். புதிதாக நல்ல முயற்சிகளை மேற்கொள்வதை உடனே செய்வது நல்லது.
 
உத்திரட்டாதி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
சொன்னதை மட்டும் செயல்படுத்துவீர். உங்களின் கொள்கை தனி என்றாலும்.. உங்களின் தலையீடுகள் மூலம் சில காரியங்களை செயல்படுத்துவீர்கள். வசதிகள் பெருகும்.
 
ரேவதி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
சுறுசுறுப்பான உங்களின் உழைப்பு என்றும் நன்மை தரும். எதையும் உறுதியுடன் செயல்படும் மனோநிலை உண்டாகும். உடன் பிறந்தவர்களின் மூலம் சிலருக்கு ஆதாயம் உண்டாகும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
மஞ்சள், ஓரஞ்சு, வெண்மை.
 
அதிர்ஷ்ட திசைகள்:
 
வடக்கு, வடகிழக்கு, தெற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்:
 
வியாழன், திங்கள், செவ்வாய்.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
சனிக்கிழமைகளில் வைரவருக்கு ராகு காலத்தில் நல்லெண்ணெய் தீபம் மூன்று மட்டும் ஏற்றி.. வேண்டிக் கொள்ள எல்லாம் சிறப்பாக அமையும்.
 
கணித்தவர்: 
ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்
செல் நம்பர் - 0091-9789341554